ஹரே கிருஷ்ண அனைவருக்கும் வணக்கம், ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபத்தை
செய்யலாம் இது கலியுகத்தில் நமக்காக பரிந்துறைக்கப்பட்டுள்ளது அதனால்
பகவான் கிருஷ்ணரது திருநாமத்தை ஜெபிப்பதால் அனைத்து தோஷங்களும்
நிவர்த்தியாகும், இவ்வுலகில் பல்வேறு சாபங்களும் ஆசிர்வாதங்களும் உள்ளன.
சாபங்களால் நாம் துன்பமடைகிறோம் ஆசிர்வாதங்களால் நாம் இன்பமடைகிறோம்.
இவ்வுலகம் இவ்வாறுதான் இயங்குகின்றது சாபங்களும், ஆசிர்வாதங்களும், ஹரே
கிருஷ்ண மஹா மந்திரம் சாபங்களும், ஆசிர்வாதங்களுக்கு அப்பாற்பட்டது,
இன்பதுன்பதிற்க்கு அப்பாற்பட்டது. நல்லது கெட்டதுக்கு அப்பாற்பட்டது.
இதெல்லாம் ஆன்மீகமான விஷயங்கள்
கலியுகத்தில் கடலைப்போன்று தோசங்கள் உள்ளன பொய், பித்தலாட்டம், ஏமாற்றுதல்,
போன்றவை எங்கு பார்த்தாலும் உள்ளது, மது, மாது, சூது, மாமிசம் போன்ற
அனைத்து தீய செயல்களும் மக்கள் செய்து கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட
சூழ்நிலையில் பகவான் கிருஷ்ணரின் திருநாமத்தை ஜெபிப்பது
பரிந்துறைக்கப்பட்டுள்ளது அனைவரும் பகவான் கிருஷ்ணரின் திருநாமத்தை
ஜெபிக்கலாம், இதில் இவர்கள் செய்யலாம் அவர்கள் செய்யக்கூடாது போன்ற
எந்தவித பாகுபாடும் கிடையாது. கலியுகத்தில் பல்வேறு யோக முறைகளை நாம்
செய்யமுடியாது, ஆனால் பக்தியோகமுறை மிக எளிமையானது, அனைவரும் செய்யலாம்,
ஜாதி. மதம், இனம், மொழி, பாலினம், நாடு போன்ற எவ்வித பாகுபாடும் கிடையாது
அனைவரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை ஜெபிக்கலாம், இது பிரஹத் நாரதீய
புராணம், கலிசந்தரண உபநிசத் போன்ற சாஸ்திரங்களில் பரிந்துறைக்கபட்டுள்ளது,
நாமனைவரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை ஜெபிக்கலாம் 1 மாலை அதாவது 108
முறை ஜெபிக்கலாம், மேலும் ஆர்வமுடையவர்கள் அதிகமாகவும் ஜெபிக்கலாம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
இதுவே ஹரே கிருஷ்ண மஹா மந்திரம், ஹரே கிருஷ்ண மந்திரம் ஜெபம் செய்வதற்கு
முன்னால் பஞ்சதத்துவ மந்திரத்தை நாம் ஜெபம் செய்ய வேண்டும். சைதன்ய மகா
பிரபு, நித்யானந்த பிரபு, ஶ்ரீ அத்வைத ஆச்சாரியர், கதாதர பண்டிதர்,
ஶ்ரீவாசா தாகூரர் இந்த ஐந்து நபர்களை நாம் நினைவு கூறுகிறோம் ஶ்ரீ கிருஷ்ண
சைதன்ய மஹாபிரபுவே இந்த மந்திரத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் அதனால் அவரது
பெயரை முதலில் நாம் உச்சரிக்கிறோம், அவரது ஆசிகளை நாம் பெற வேண்டும்.
ஜெய ஶ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த
ஶ்ரீ அத்வைத கதாதர ஶ்ரீ வாசாதி கவுர பக்த விருந்த
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
அனைவரும் ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம் செய்யவும்
அனைத்து விதமான நன்கொடைகள் வரவேற்க்கப்படுகின்றன
இஸ்கான் திருவள்ளூர்
#29, வி.எம்.நகர், ஆர்.எம். ஜெயின் வித்யாபீடம் மேல்நிலைபள்ளி பின்புறம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ் நாடு, போன் 09611243737
இந்திய வருமான வரி சட்டம், 80/G பிரிவின் படி இஸ்கான் இயக்கத்திற்க்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி சலுகை உண்டு
ISKCON TIRUVALLUR
A/C No 156101000374
ICICI Bank
IFSC Code: ICIC0001561
Branch: Tiruvallur
No comments:
Post a Comment