Sunday, 6 March 2022

 

மந்திர தியானம்

ஹரே கிருஷ்ண அனைவருக்கும் வணக்கும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் இஸ்கான் திருவள்ளுர் சார்பாக ஹரே கிருஷ்ண மஹா மந்திர தியானத்தை செய்யலாம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் நமக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதனால் பகவான் கிருஷ்ணரது திருநாமத்தை ஜெபிப்பதால் அனைத்து தோசங்களும் நிவர்தியடையும், பல்வேறு சாபங்கள் இவ்வுலகில் உள்ளன சாபங்களால் நாம் துன்பமடைகின்றோம் ஆசிர்வாதங்களால் நாம் இன்பமடைகின்றோம் இவ்வுலகமே இவ்வாறுதான் இயங்குகின்றது சாபங்கள், ஆசீர்வாதங்கள், ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் சாபங்கள், ஆசீர்வாதங்களுக்கு அப்பாற்பட்டது இன்பதுன்பத்திற்க்கு அப்பாற்பட்டது நல்லது கெட்டதுக்கு அப்பாற்பட்டது

கலியுகத்தில் கடலைபோன்ற தோசங்கள் உள்ளன பொய், பித்தலாட்டம், ஏமாற்றுதல் எங்கே பார்த்தாலும் மது, மாது, சூது, மாமிசம் போன்ற அனைத்து தீய செயல்களும் செய்துகொண்டு வருகின்றனர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிருஷ்ணரின் திருநாமத்தை ஜெபிப்பது மட்டுமே நமக்கு நன்மையை பயக்கும் செயலாகும். இதில் எந்த பாகுபாடும் கிடையாது அனைவரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபிக்கலாம் கலியுகத்தில் பல்வேறு யோகமுறைகளை நாம் செய்ய முடியாது, பக்தியோகமுறை மிக எளிமையானது, ஹரே கிருஷ்ண மஹா மந்திரம், ஜெபம் செய்வது மிக எளிமையாது, அனைவரும் செய்யலாம் ஜாதி, மதம், இனம், மொழி, பாலினம் எவ்வித பாகுபாடும் கிடையாது. அனைவரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபம் செய்யலாம்  சாஸ்திரங்களில் பிரஹத் நாரதீயா புராணம், கலிசந்தரண உபநிசத், போன்ற சாஸ்திரங்களில் பரிந்துறைக்கப்பட்டுள்ளன. நாமனைவரும் இன்றைய தினம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தியானம் செய்யலாம் குறைந்தது 108 தடவை செய்யலாம் மேலும் ஆர்வமுடையவர்கள் அதிகமாகவும் செய்யலாம்.

இதற்கு முன்னால் பஞ்சதத்வ மந்திரத்தை நாம் ஜெபம் செய்ய வேண்டும் ஶ்ரீ சைதன்ய, நித்யானந்த, அத்வைத ஆசாரியர், கதாதர பண்டிதர், ஶ்ரீவாச தாகூர், இவ்ஐவரை நாம் நினைவு கூறுகிறோம். சைதன்ய மஹாபிரபு நமக்கு இந்த மஹாமந்திரத்தை கொடுத்திருகின்றார் அதனால் அவரது பெயரினை முதலில் நாம் உச்சரிக்க வேண்டும்

ஜெய ஶ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த

ஶ்ரீ அத்வைத கதாதர ஶ்ரீவாசாதி கவுரபக்த விருந்த

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

நாமனைவரும் ஒரு மாலை ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் ஜெபம் செய்ய வேண்டும், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை பற்றி ஶ்ரீல பிரபுபாதரின் தன்னை அறியும் விஞ்ஞானம் என்ற புத்தகத்தை வாசிப்போம் நவீன யுகத்தில் யோகப்பயிற்சி நாம் வாழும் தற்போதைய யுகத்தில் பல்வேறு விதமான பௌதீக முன்னேற்றத்தை  நாம் அடைந்துள்ளோம் மிக வேகமாக பயணம் செய்கின்றோம் மிக வேகமாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கின்றோம்

14.00 தொலைத்தொடர்பு சாதனங்கள் அந்தளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது போக்குவரத்து சாதனங்களும் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது ஆகாயம், கப்பல், பேருந்து, போன்ற பல்வேறு போக்குவரத்து மிக உயர்ந்த நிலையில் வளர்ந்துள்ளது அதைப்போன்று தொலத்தொடர்பு சாதனங்கள் வாயிலாக கண்டம் விட்டு கண்டம் தொடர்பு கொள்கின்றோம் அமேரிக்கா போன்ற தொலைதூரத்தில் இருக்கும் நாடையும் நாம் தொடர்புக் கொள்கின்றோம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்ற பல்வேறு விசயங்கள் வந்துள்ளன ஆகையால் மிக வேகமாக நாம் தொடர்பு கொள்கின்றோம், முகநூல் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. யூடூப் சேனல் போன்ற பல்வேறு சேனல் மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன கலியுகத்தில் இந்த அளவிற்க்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

15.00 கலியுகத்தில் யோகம் எப்படி செய்வது அந்த காலத்தில் காட்டிலே தியானம் செய்வார்கள், ஏதாவது ஆசிரமங்களை அமைத்து அங்கே தவம் செய்வார்கள், அந்தளவிற்க்கு காட்டில் போய் நாம் தவம் செய்ய முடியாது இப்படிபட்ட சூழ்நிலையில் எப்படி தியானம் செய்வது இது போன்றவற்றை ஶ்ரீல பிரபுபாதரின் புத்தகத்தின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம் நவீன யுகத்தில் யாருக்கும் அந்தளவிற்க்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய ஆர்வமில்லை, யாருக்கும் யோகம், தியானம் செய்ய விருப்பம் கிடையாது, அனைவரும் சோம்பல் நிலயில் உள்ளனர், போதை மருந்து உட்கொள்கின்றனர், சூதாட்டத்திற்கு அடிமையாக இருக்கின்றார்கள், மது, விலைமாது, மாமிசம், போன்றவற்றிக்கு அடிமையாக இருகின்றார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வாறு யோகம் செய்வது, யோகம் பயில்வதற்க்கு சாதகமான சூழ்நிலைக் கிடையாது பல்வேறு அசௌகரியங்கள் உள்ளன பல்வேறு தொல்லைகள் இருக்கின்றன குடும்பத்தில் யாரும் ஒத்துழைப்பதில்லை நம்மை கேலி, கிண்டல் செய்வார்கள், நண்பர்கள், உறவினர்கள், வேலையில் உதவி செய்பவர்கள் போன்ற பல்வேறு நபர்கள் நம்மை கேலி செய்யலாம், யோகம் செய்வதை ஆதரிக்கமாட்டார்கள், இவையெல்லாம் வயதான காலத்தில் செய்யலாமே இளமை பருவத்தில் பணம் ஈட்ட வேண்டும் அல்லவா, எந்த வயது வித்தியாசம் இன்றி அனைவரும் யோகம் செய்யலாம், செய்ய வேண்டும்  பகவனுக்கு பக்தி தொண்டு செய்வதுதான் மனித பிறவியின் நோக்கம்  

17.00 மற்ற பிறவிகளில் இறைவனுக்கு தொண்டு செய்ய முடையாது, மனிதப் பிறவியில் மட்டுமே இது சாத்தியம் விலங்கு நாய், பூணை, எலி, புலி, சிங்கம் இறைவனுக்கு நேரடியாக தொண்டு செய்ய வாய்ப்பில்லை, மனிதனால் மட்டுமே இறைவனை புரிந்து கொள்ளவதோ அவருக்கு தொண்டாற்றுவதோ சாத்தியம். நாம் கிருஷ்ணரின் திருநாமத்தினை உச்சரிக்கலாம் அவரின் திவ்யமான லீலைகளை கேட்கலாம், பாடலாம், நவவித பக்தி தொண்டை மனிதர்களால் மட்டுமே செய்ய முடியும், விலங்குளாலோ மற்ற பிற உயிரினங்கள் பக்தி தொண்டை செய்ய முடியாது. யோகிகள் பல்வேறு சித்திகளை அடைகிறார்கள், அஷ்ட சித்திகள், அஷ்டாங்க யோக முறைகள் கர்ம யோகம், தியான யோகம் இவ்வாறு பல்வேறு யோகமுறைகள் உள்ளன.

18.00 இப்படியுள்ள யோக மார்கத்தில் பக்தியோகம் மிக சிறந்தது, எளிமையானது அதேப்போன்று கடுமையானதும்கூட இதில் பணிவு மிகவும் முக்கியம், பிரம்மசர்யம் மிகவும் முக்கியம், கிரகஸ்தர்களும் இந்த பக்தி யோகத்தை செய்யலாம் சில யோகங்கள் பிரம்மசாரிகள், சன்னியாசிகள் மட்டுமே செய்ய முடியும்.  யோகிகள் எட்டு சித்திகளை அடைகின்றார்கள் நவீன யுகத்தில் விஞ்ஞானிகள் பல்வேறு சித்திகளை அடைந்துள்ளனர், பல்வேறு தொழிற்ச்சாலைகள், பல்வேறு பொறியாளர்கள், பல்வேறு படைப்புகளை படைத்துள்ளனர் அந்த எட்டு சித்திகள், யாவை

1. ஒரு அணுவை விட சிறயதாக ஆவது, ஒரு மலையை விட பெரியதாக ஆவது, அணிமா, லகிமா, இசிதா, வசிதா, மைக்ரோஸ்கோப்பில் பார்க்கும் அளவுக்கு சிறியவர்களாக மாறலாம், பெறிய உருவத்தையோ அல்லது சிறிய உருவத்தையோ எடுக்கலாம். காற்றைவிட லேசானதாக மாறலாம், பட்டம் பரப்பதற்க்கு காரணம் அது மிக லேசானதாக இருகின்றது மேலும் எந்த வாகங்களின் உதவியின்றி அவர்கள் விரும்பும் இடத்திற்கோ, கிரகத்திற்க்கோ செல்லலாம்

20.00 தற்போது இயந்திரத்தின் உதவியால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்க்கு பயணம் செய்கின்றோம் யோகிகள் எந்தவிதமான பயணச்சாதனங்களின் உதவியின்றி அவர்கள் எந்தநாடு, கிரகத்திற்க்கு போகலாம் அந்த அளவிற்க்கு அவர்கள் சித்திகளை பெற்றிருக்கின்றார்கள் யோகம் செய்வதால் இப்படிப்பட்ட சித்தியை அவர்கள் அடைவார்கள் மற்றவர்கள் மயங்கச்செய்வது. போன்ற பல்வேறு சித்திகளை அடைகிறார்கள் யோகிகள் ஆனால் பக்தியோகமோ எந்த சித்தியை அடையவேண்டும் என்ற நோக்கம் உடையதல்ல, யோகிகள் சித்தியை அடைவதற்காகவே யோகத்தை செய்கிறார்கள் ஆனால் பக்தர்களின் நோக்கம் அதுவல்ல அனைத்து சித்திகளையும் பகவான் கிருஷ்ணர் பெற்றுள்ளார், அதனால் அவரை யோகேஷ்வரன் என்று அழைக்கின்றார்கள் பக்தர்கள் பகவானுக்கு தொண்டு செய்வதால் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பகவான் கிருஷ்ணர் கொடுக்கின்றார் “யோகஷேமம் வஹாமியஹம்” இல்லாதவற்றை கொடுக்கின்றார் இருப்பவற்றை பாதுகாக்கின்றார் அதனால் தனியாக சித்திகளை அடைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது தொண்டு செய்வது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் சித்திகளை அடையவேண்டும் என்ற நோக்கத்துக்காக நாம் பக்தியை செய்யக்கூடாது குறிப்பாக இந்த பக்தியோகத்தினை செய்தல் கூடாது

எந்தவிதமான எதிர்ப்பார்ப்பு இல்லாமல் செய்வதுதான் பக்தி அன்பு தொண்டு அன்பு பரிமாற்றம் பதஞ்சலி யோகம் ஹதயோகம் உள்ளது இதைப்போன்ற பல்வேறு யோகமுறைகள் மக்கள் பயின்று வருகின்றார்கள்.

அதற்கும் இதற்கும் நிறைவே வித்தியாசம் உள்ளது  ஹதயோகம் பயிற்ச்சி செய்வதால் உடல் ஆரோக்கியமாக வைத்துகொள்ளலாம் நோய் நோடியில்லாத வாழ்க்கை வாழலாம் உடல் சுருசுருப்பாகவும், மெல்லியதாகவும் எந்தவிதமான நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ்க்கை வாழலாம் ஹதயோகம், அஷ்டாங்கயோகம், செய்வதால் பல்வேறு பயன்கள் உள்ளது  

23.00 யோகம் செய்வதற்க்கு புலன்களை நாம் கட்டுப்படுத்த வேண்டும் வாய், வயிறு, பாலுறுப்பு, மூன்று புலன்களும் ஒரே நேர்கோட்டில் உள்ளது. இந்த மூன்று புலன்களும் நாம் அடக்கவேண்டும் அப்போது யோகத்தை பயிற்ச்சி செய்ய முடியும், நல்ல விசயத்தை கேட்க வேண்டும், நல்ல விசயத்தை பார்க்க வேண்டும் நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும், காரசாரமான உணவினை தவிற்க வேண்டும் அழுகிய, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிற்க வேண்டும், ஊசிப்போன எச்சில்பட்ட உணவுகளை தவிற்க வேண்டும். கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணருக்குகாக நாம் தியாகம். தவம், தானம் செய்ய வேண்டும், புலன்களை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

24.00 கிருஷ்ண பஜனைகளை கேட்கலாம் கிருஷ்ணருக்கு சம்பந்தமில்லாத விசயத்தினை நாம் கேட்கக்கூடாது விதவிதமான பௌதீக பாடல்களை கேட்பதோ, திரைப்படங்களை பார்ப்பதால் மனம் அசுத்தம் அடைகின்றது, மனம் சிதரி யோகம் பயில்வதற்க்கு கடினமானதாக இருக்கும், பக்திமயமான பாடால்களை பார்க்கலாம், பக்தியோகத்திற்க்கு சம்பந்தமான திறைப்படங்களை பார்க்கலாம், நாம் புலன்களை கட்டுப்படுத்த வேண்டும், கண், மூக்கு, வாய், காது, ஆகிய புலண் உறுப்புகளை கட்டுப்படுத்த வேண்டும்.

நாக்கினை கட்டுப்படுத்த கிருஷ்ணக்கு அர்ப்பணிக்க பட்ட உணவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்     கிருஷ்ணர் கதையை மட்டுமே கேட்க வேண்டும். கிருஷ்ணர் கோயில் தரிசனம் செய்யலாம்.

25.00 நல்லவைகளை மட்டும் பார்ப்பதோ, கேட்பதோ பேசுவதோ வேண்டும், “சங்காத் சஞ்சாயதேகாமா” நாம் யாருடன் சங்கம் வைத்துள்ளோமோ அந்த குணநலன்களே நம்மிடம் வரும்.  அதனால் நாம் நல்லவர்களுடன், பக்தர்களுடன் சங்கம் வைத்துக்கொள்ள வேண்டும் கிருஷ்ணரை நாம் மூன்றுவிதமாக உணர்ந்துக் கொள்ளலாம் பிரம்மஜோதி எங்கும் நிறைந்திருக்க கூடியது இது சூரிய ஓளியினைப் போன்றது உருவமற்றது ஓளிவடிவானது, இரண்டாவது எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மா, உருவமுடையவர், மூன்றாவதாக பகவான். அழகிய சியாமசுந்தர முரளி மனோகர, ராதாகிருஷ்ணர் இந்த உருவத்தின் மீது நாம் தியானம் செய்ய வேண்டும்.

26.00 லட்சுமி நாராயணர், அல்லது ராதாகிருஷ்ணர் உருவத்திலும் வழிபடலாம்,  பரமாத்மா, நமக்கு குரு, சைத்ய குரு, நமது உடலில் இருப்பவர் இவர், நமக்கு தேவயானவற்றை கொடுப்பவர், இல்லாதவற்றை பாதுகாப்பவர் இவர்தான் பரமாத்மா ரூபத்தில் நமது உடலில் இருக்கின்றார் பகவான் விஷ்ணு, பரமாத்மா ரூபத்தில் நான்கு கரங்களை கொண்டுள்ளார், நான்கு கரங்களில் சங்கு, சக்கிரம், கதை, தாமரை, போன்ற நாங்கு பொருட்களை ஏந்தியுள்ளார், தாமரை, சங்கு நம்மை ஆசிர்வதிப்பதற்கு சக்கரம் கதை தீயவர்களை தண்டிப்பதற்க்கு

27.00 துருவ மஹாராஜா, பகவான் விஷ்ணுவின் தியானம் செய்தார் அதனால் அவர் சக்திபெற்றவரானார் அதனால் அவருக்கு துருவலோகம் கிடைத்தது. அதேப்போன்று நாரதமுனியும் தனது முந்தைய பிறவியில் பகவான் விஷ்ணுவின் பரமாத்மா, வடிவத்தின்மீது தியானம் செய்ததால் சித்தி பெற்றார். தேவரிசியாக மாறினார் மிக உயர்ந்த நிலையை அடைந்தார் பரமாத்மா, மீது தியானம் செய்பவர்கள் உயர்ந்த நிலையினை அடைகிறார்கள் அவ்வாறே பக்தியோகிகளும் மேலும் உயர்ந்த நிலையினை அடைவார்கள், உருவமற்ற பிரம்ம ஜோதியினை வழிபடுபவர்கள் முதல்கட்ட ஆன்மீகவாதிகள், பரமாத்மாவை வழிபடுபவர்கள் இரண்டாம் நிலை ஆன்மீகவாதிகள், பகவான் விஷ்ணுவை வழிபடுபவர்கள் முதல் நிலையான ஆன்மீகவாதிகள் “யோகினாமபி சர்வேசாம் மத் கதேநந்தராத்மன” நம் மனதை நாம் ஒரு நிலைப்படுத்த வேண்டும், மனம் குரங்குபோல் இங்குமங்கும் தாவிக்கொண்டே இருக்கும் அதுமிகவும் சஞ்சலமானது

28.00 ஒரு விசயத்தை ஏற்றுக்கொள்ளம் பிறகு அவ்விசயத்தை தியாகம் செய்யும்,ஒரு விசயத்தின் மீது பற்றுதல் கொண்டு அதை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளதாக இருக்கும் அதேப்போன்று வேரோரு விசயத்தின் மீது வைராக்கியமானதாக இருக்கும் போக தியாக விர்க்தி, வைராக்கியம் வேண்டும், வேண்டாம் இவ்வாறு நிகழ்ந்துகொண்டே இருக்கும் மனது சஞ்சலமானது யோகம் செய்யவேண்டும் என்றால் பிரம்மசர்யத்தை நிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டும், கிரகஸ்தர்கள் குழந்தையை பெற்று கொள்வதற்க்காக மட்டும் மாதம் ஒருமுறை இணையவேண்டும் அவர்களும் கட்டுப்பாடுடன் வாழ்க்கையினை வாழவேண்டும், பிரம்மசர்யம் மிக மிக முக்கியம் உடல் வலிமை, மனவலிமை பெறலாம், வாழ்க்கையில் உறுதியாக நாம் வெற்றிப்பெறலாம்

29.00 அளவுக்கு மீறினால் அமிர்தமும் விசம் என்றவாறு அளவுகடந்த புலன்திருப்தியில் ஈடுபடக்கூடாது அனைத்தையும் அளவோடு செய்ய வேண்டும் அளவுக்கடந்த புலன்திருப்தியில் ஈடுபட்டால் உடல் வலிமை குறைந்துவிடும் மனவலிமையும்    குறைந்துவிடும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது பிரம்மசர்யத்தை கடைப்பிடித்தால் உடல், மனவலிமை பெரும்,சுயக்கட்டுப்பாடு மிகமுக்கியம் நாம் பெறிய பெறிய மாட மாளிகையில் அமர்ந்துகொண்டு புலன்திருப்தியில்  ஈடுபட்டுக் யோகத்தை பயிற்சி செய்ய முடியாது நாம் மாடமாளிகையில் இருந்தாலும் பிரம்மசர்யத்தை கடைப்பிடிக்க வேண்டும் தவம், தானம், தியாகம் செய்ய வேண்டும் இதுபோன்ற பல்வேறு விசயத்தினால் நாம் இன்பத்தை அடையலாம் இந்த உடலிலும், வாழ்விலும் அடுத்த பிறவியிலும் நாம் நல்ல நிலையினை அடைவோம் பகவான் கிருஷ்ணருக்காக தியாகம், தவம், தானம், செய்ய வேண்டும் நல்லதே பார்க்க வேண்டும், நல்லதே கேட்க வேண்டும், நல்லதே பேச  வேண்டும், கிருஷ்ண பிரசாதத்தினை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் அது ஒரு தவம் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் அது ஒரு தவம், நாம் வந்து பக்தி தொண்டு செய்ய வேண்டும் சிரவணம், கீர்த்தனம், விஷ்ணோ ஸ்மரனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆதம நிவேதனம் போன்ற நவவித பக்தி தொண்டில் நாம் ஈடுபடவேண்டும் புலன்களை கட்டுப்படுத்துவது சாதாரண விசயம் கிடையாது, புலன்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது புலன்கள் எதிலாவது ஈடுபடவேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கும்

31.00 புலன் விசயங்கள் இல்லையெனில் ஒருவிதமான ஏக்கம் உண்டாகும், புலன் விசயங்கள் அதிக அளவில் கிடைக்க பெற்றால் பேராசை பிடித்தவர்களாக மாறிவிடுவார்கள் அதேப்போன்று, இசை, நடனம், நாடகம், இதெல்லாம் அளவில்லாமல் மிக விரும்பி சிலர் பார்ப்பார்கள் அதைப்போன்று விதவிதமான உணவுகள் கிடைக்க பெற்றால் அதை மிக ஆர்வமாக உட்கொள்வார்கள் அப்படி அதிகமாக உணவு உட்கொள்பவர்கள் யோகியாக முடியாது மிகக்குறைந்த அளவு உணவு உட்கொள்பவர்கள் யோகியாக முடியாது அதிகமாக உறங்குபவர்களும் யோகியாக முடியாது, சரியான உறக்கமில்லாமல் இருப்பவர்களும்  யோகியாக முடியாது, ஒரு யோகி அனைத்திலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் உண்பது, உறங்குவது தற்காத்து கொள்வது, போன்ற பல்வேறு விசயத்திலும் நாம் கட்டுப்பாடுடன் வாழவேண்டும்.

32.00 அப்போது மட்டுமே நாம் யோகம் செய்ய முடியும் மனிதர்களும். விலங்குகளும் சமம்தான் எப்படியென்றால் உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது, தற்காத்து கொள்வது, மனிதர்களும், விலங்குகளும் செய்கின்றன அதைப்போன்றுதான் விலங்குகளும், மனிதர்களும் செய்கின்றனர், மனிதர்கள் மட்டுமே தவம் செய்ய முடியும், விலங்குகளால் தவம் செய்ய முடியாது. கட்டுப்பாடுடன் வாழ்பவர்கள்தான் மனிதர்கள், கட்டுப்பாடற்று வாழ்பவர்கள் விலங்குகள், இப்போதுள்ள சமுதாயம் பார்த்தீர்களேயானால் எந்த கட்டுப்பாட்டு விதிகளையும் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை மனம்போன போக்கில் செயல்படுகின்றார்கள், விலங்குகளைப்போல் ஆடையில்லாமல் சுற்றித்திரிகிறார்கள் பல்வேறு பீச்        

 

No comments:

Post a Comment